திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் 42 வயதான கொத்தனார்.இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 14 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், தான் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் தந்தை தலைமறைவானார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தந்தையை தேடி வந்தனர். கடந்த 7 மாதமாக தலைமறைவாக இருந்த அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.