பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருச்சி குழுமணியை சேர்ந்த வேளாண் பட்டதாரியும், விவசாயியுமான ஒண்டிமுத்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுடன் வாழைப்பழம் அல்லது வாழைப்பழ அத்தி வழங்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட விவசாயிகளும் பட்டதாரி ஆகலாம் என்ற முறையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் தொலைதூரக் கல்வி படிப்புகளை விவசாயிகள் தொடர வழிவகை செய்ய வேண்டும். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும். திருச்சியில் மல்லிகை பூ வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மது பாட்டில்கள் வீசப்படுவதை தவிர்க்கும் பொருட்டு மது வகைகளை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.