திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார்களை அடுத்து மணப்பாறை நகராட்சி நிர்வாகம் சந்தை குத்தகை உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் மிகப்பெரிய கால்நடை சந்தையான மணப்பாறை சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மட்டுமே செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்ற சந்தை, இனி புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் எழுந்தன. அந்த புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தையின் 2026-27 ஆண்டுக்கான குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது.

Comments are closed.