தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின் பேரில், விடுதலை போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவன், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், த.வெ.க துணைப் பொதுச்செயலாளர் விஜய் அருள், திருச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க பொறுப்பாளர் தர்கா சௌகத், குடமுருட்டி கரிகாலன், வக்கீல் என்.எஸ் திலீப், வெள்ளாளர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் ஹரிஹரூண், த.வெ.க பிரமுகர்கள் என்.ஜவகர், யூ.விக்னேஷ்வரன், எனர்ஜி அப்துல் ரஹ்மான், முல்லை சுரேஷ், ஜெரால்டு, வேதாத்ரி நகர் பாலு, பி.செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.