சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மரியாதை…!
“நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.