Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் அருகே தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திருச்சியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த கணேசன் மற்றும் ஆண்டி ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான சதீஷ் என்பவரை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்