Rock Fort Times
Online News

டிக்கெட் முன்பதிவு குறைவு: திருச்சி – பெங்களூரு சிறப்பு ரெயில் ரத்து…!

திருச்சி – பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (06008) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்