Rock Fort Times
Online News

ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் இழப்பு – ரயில்முன் பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை !

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி. இவர் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கருப்பசாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர் எனத் தெரிகிறது. இவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த கருப்பசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தீயணைப்பு வீரர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்