மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று(01-07-2024) தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதேபோல திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சங்க செயலாளர் சுகுமார், துணை தலைவர் மதியழகன், இணை செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, ராஜலட்சுமி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, முத்துகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், வக்கீல்கள் செந்தில்நாதன், மகேஸ்வரி, வையாபுரி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், இன்று நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. நாளை 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 3ந்தேதி (புதன்கிழமை) மத்திய அரசு அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது

Comments are closed.