நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் மாற்றப்படலாம் என்று பரவலாக பேச்சு இருந்து வந்தது. அதன்படி, இன்று(01-07-2024)
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், சுற்றுலா துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் ஐஏஎஸ் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐஏஎஸ் சுற்றுலா துறையின் முதன்மை செயலாளராகவும், கால்நடை பராமரிப்பு துறையின் கூடுதல் செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராகவும், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செந்தில் குமார் ஐஏஎஸ் சுற்றுச்சூழல் துறையின் செயலாளராகவும், சுற்றுச்சூழல் துறையில் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு ஐஏஎஸ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளர் ஆகவும்,
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்த செல்வராஜ் நெடுஞ்சாலை துறை செயலாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஜான் லூயிஸ், சமுக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக இருந்த விஜயலட்சுமி ஐஏஎஸ் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின் இயக்குனராகவும், நில சீர்திருத்தத் துறையின் ஆணையராக இருந்த வெங்கடாசலம் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண காப்பகம் துறையின் ஆணையராகவும், நிலச்சீர்திருத்தம் துறை செயலாளராக ஹரிஹரனும், போக்குவரத்து துறை செயலாளராக லில்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராகவும், தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநராக இருந்த சாய் குமார் ஐ.ஏ.எஸ் தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநராகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்கநராக இருந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநராகவும், உப்புக்கழக தலைவராக மகேஸ்வரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed.