Rock Fort Times
Online News

திருச்சி தில்லைநகரில் மித்ரன் ஹெல்த்கேர் துவக்கம்…!

திருச்சி, தில்லைநகர், கோட்டை ஸ்டேஷன் ஸ்டெர்லிங் பிஸ் பார்க்கில் மித்ரன் ஹெல்த்கேர் சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது. திருச்சி காவேரி மருத்துவமனையின் முதன்மை பல் மருத்துவர் டாக்டர்.வி.ஐயப்பன் சங்கர் ரிப்பன் வெட்டி புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
திருச்சி எஸ்.ஆர்.எல். ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் டி.மூர்த்தி, பத்மாவதி, சரஸ்வதி மற்றும் நாகலெட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். மித்ரன் ஹெல்த்கேர் சித்தா & ஆயுர்வேத மருத்துவமனையின் நிறுவனர் பி.பாலசுப்ரமணியன் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.

இவ்விழாவில் தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மருத்துவமனையில் தோல் நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, பாலியல் குறைபாடுகள், அல்சர், சிறுநீரகக்கல், மூட்டுவலி, கை கால் மற்றும் கழுத்துவலி என அனைத்து வகையான நாள்பட்ட தோல் வியாதிகள், சொரியாசிஸ், எக்ஸிமா உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேதா முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்