மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் கே.டி.சிக்னலில் இருந்து இன்று(25-01-2025) அமைதி ஊர்வலம் புறப்பட்டது. சாஸ்திரி ரோடு, தென்னூர் அண்ணா நகர் வழியாக சென்று தியாகிகள் சின்னசாமி, மனோகர், வீரமலை, சண்முகம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார், மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், கழக நிர்வாகிகள் குடமுருட்டி சேகர், பி.ஆர்.சிங்காரம், கதிர்வேல், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ, கமால், மோகன்தாஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.