திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) டி.செந்தில்குமார் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கி பேசுகையில், விபத்தில்லா வாழ்வை பெற ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளையும், அரசு அன்றாடம் அறிவிக்கின்ற அறிவிப்புகளையும், கட்டுப்பாடு நெறிமுறைகளையும் கடைபிடித்தாலே நாம் நம் பயணத்தை பாதுகாப்பானதாகவும், விபத்தை முழுமையாக தவிர்க்க முடியும் என்று எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.