கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். கைதுக்கு பயந்து, அதற்கு முன்னதாக அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, சிவராமன் கைதால் மன உளைச்சல் இருந்த அவரது தந்தை அசோக்குமாரும் இன்று உயிரிழந்துள்ளார். காவேரிப்பட்டினம் பகுதியில் குடிபோதையில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கிய அசோக்குமார், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். தொடர்ந்து இருவரின் உடல்களையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.