Rock Fort Times
Online News

கோபிசெட்டிபாளையம் திமுக முன்னாள் எம்பி காலமானார்…!

கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(20-07-2024) காலமானார். அவருக்கு வயது 75.  திமுக முன்னாள் எம்.பி.யான வி.பி. சண்முகசுந்தரம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த 1996ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். இவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.  அவரது மறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சண்முகசுந்தரம் மறைவுக்கு திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அதில், திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன்.
கட்சியின் தீவிர பற்றாளராக விளங்கிய விபி சண்முகசுந்தரம்  1996ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர். இளம் வயது முதலே கட்சி பற்றாளராக விளங்கியவர். கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சி உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்