முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் 101- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கழக கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம், மாத்தூர் கருப்பையா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி மற்றும் துர்காதேவி, கண்ணன், மோகன்தாஸ், கமல், முஸ்தபா, நாகராஜ், இளங்கோ, கனகராஜ், கிராப்பட்டி செல்வம், சீனிவாசபெருமாள், தொ.மு.ச.குணசேகர், கலைச்செல்வி, குமாரவேல் , வழக்கறிஞர்கள் கவியரசன், மணிபாரதி, அந்தோணி, நவல்பட்டு விஜி, செவந்திலிங்கம், பி.ஆர்.பாலசுப்ரமணியன், முத்து பழனி சோழன், சம்பத், உத்தமர்சீலி ராஜேந்திரன், மதனா ஜெயராம், வாசுகி, பீமநகர் சதீஷ், சிந்தை கார்த்திக், எம் ஆர்.எஸ்.குமார், தாஹிர், கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.