Rock Fort Times
Online News

“ஒரு அமைச்சரே லஞ்சம் கொடுத்ததாகக் கூறுவது தவறு; அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்…- அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பு ஏற்றது முதல் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சென்னை,
பரந்தூர் விமான நிலைய திட்டமும் ரத்து செய்யப்பட்டது . மேலும், இன்றைய கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரியவில்சன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் லஞ்சம் பெறப்பட்டது. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் லஞ்சம் வாங்கினார், அதற்கு நானே சாட்சி என்று கூறினார். இதுகுறித்து முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தெரிவித்திருக்கிறார். லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் கூறியது தவறு. அவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை பற்றி அவதூறாக பேசினால் வழக்கு தொடர்வோம். இதேபோல் ஏற்கனவே என் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்தேன். அமைச்சர் மரிய வில்சன், என் மீது அவதூறு
கூறுகிறார். சட்டப்பேரவையில் விவாதத்தை மடைமாற்றம் செய்கின்றனர்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்