தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதைத்தொடர்ந்து, அவர்களது கட்சிப் பதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்தநிலையில் சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் பேரவைத் தலைவரை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த
விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவாரா? அல்லது திமுகவில் இணைவாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா பனையூரில் நடைபெற உள்ளது. அன்று தவெகவில் இணைய விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.