Rock Fort Times
Online News

உங்களை யாராவது ஏமாற்றுகிறார்களா? பாலியல் தொல்லையா? என்னை தொடர்பு கொள்ளுங்கள் ‘ ஐ ஆம் வெயிட்டிங்”- லத்தியுடன் காத்திருக்கும் திருச்சி எஸ்.பி. வருண்குமார்…!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் வருண்குமார் ஐபிஎஸ். இவர் பதவியேற்றது முதல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.  ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்த கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இதனால், ரவுடிகள் பயந்து நடுங்கி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் பொது மக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாகசம் செய்யும் வாலிபர்களையும் தட்டி தூக்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வருகிறார். லாட்டரி, கஞ்சா விற்பனை, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு துணை போகும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன.  இந்தநிலையில் துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசுவதுபோல ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்ற டயலாக்குடன், எஸ்.பி. வருண்குமார், தன் மொபைல் போன் எண் கொடுத்து, கையில் லத்தியுடன் நிற்பது போலவும், எஸ்.பி.அலுவலகம் முன்பு லத்தியுடன் அமர்ந்து இருப்பது போலவும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.  அதில், குற்றங்களை பட்டியலிட்டு, புகார் தெரிவிக்க விரும்பினால்
94874 64651 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார். இது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்