திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் பிறந்தநாளையொட்டி ஹெர்ஜாப் எம்.ஆர்.எம். ஆடியோலஜி சென்டர் மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச செவித்திறன் மற்றும் கண் பரிசோதனை முகாம் திருச்சி மேலசிந்தாமணி ராமமூர்த்தி நகர் லோகா டவர் மினி ஹாலில் இன்று(20-7-23) நடந்தது. முகாமிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அண்ணாசிலை எஸ்.விக்டர், ராயல் கார்ஸ் சலாம் பாய், கனி மற்றும் எஸ்.அம்பேத்பாபு, எஸ். தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, மருத்துவ குழுவினர் இலவசமாக செவித்திறன் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனை கூறினர். இதற்கான ஏற்பாடுகளை மேலசிந்தாமணி ஸ்ரீ முத்துமாரியம்மன் இளைஞர் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.