வெல்ஃபேர் கட்சி சார்பில் சுதந்திர தின விழா..( வீடியோ இணைப்பு )
அல்லூர் கே.சீனிவாசன் கொடி ஏற்றினார்...
77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெல்ஃபேர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரையில் உள்ள கட்சியின் அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் அ.சிராஜ்தீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான அல்லூர் கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான மு.காஜாமைதீன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மு.ஹு. முஹம்மத் யாஸீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பீ. ஜகுபா் சாதிக் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.