Rock Fort Times
Online News

திருச்சியில்  தலையை கருப்பு துணியால் மூடி விவசாயிகள் போராட்டம்…! 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடனை  தள்ளுபடி செய்ய வேண்டும், வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வீடுகளில் வங்கி பணியாளர்கள் புகுந்து  பொருட்களை பறிமுதல் செய்வதை அரசு கட்டுப்படுத்த வேண்டும், கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி   அண்ணா சிலை முன்பு கடந்த 18 நாட்களாக நூதன முறையில் பல்வேறு  போராட்டங்களில் விவசாயிகள்  ஈடுபட்டு வருகின்றனர். 19வது நாளாக சுதந்திர தினமான இன்று நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தலையை கருப்பு துணியால் மூடி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை ஆணையர் நிவேதாலட்சுமி, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  விவசாயிகளிடம் சென்று கருப்பு துணி அணிந்து  போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் கருப்பு துணியை அகற்றிவிட்டு போராட்டத்தை  தொடர்ந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்