Rock Fort Times
Online News

திருச்சி கோர்ட்டில் சுதந்திர தின விழா…! நீதிபதி பாபு கொடியேற்றினார்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் நசீர் அலி, பார் அசோசியேஷன் தலைவர் பாலசுப்பிர மணியன், செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து, குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள்  வரகனேரி சசிகுமார், இரா.பிரபு, செயலாளா் வெங்கட், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் வக்கீல்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்