இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறையினருக்கு நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதியால் விருது வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் காவல்துறையை சேர்ந்த 954 பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் பணியாற்றும் சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி ஆகியோருக்கும் ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையகம்) த.மதியழகன், திருச்சி மாநகர சி.பி.சி.ஐ.டி(ஓ.சி.யு.) இன்ஸ்பெக்டர் எ.இளங்கோவன் ஜென்னிங்ஸ் உள்பட தமிழக காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கு வழங்கப்பட உள்ளன.

https://platform.joinus4health.eu/forums/users/virgodaniel8/
திரà¯à®à¯à®à®¿ மாநà®à®° à®à®¿.பி.à®à®¿.à®.à®à®¿(à®.à®à®¿.யà¯.) à®à®©à¯à®¸à¯à®ªà¯à®à¯à®à®°à¯ à®à®³à¯à®ªà® 21 பà¯à®°à¯à®à¯à®à¯ à®à®©à®¾à®¤à®¿à®ªà®¤à®¿ விரà¯à®¤à¯ – Rockfort Times