திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களது வாகனத்தை சோதனையிட்ட போது 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது, மூவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ராமு என்கிற முரளி (48), அவரது மனைவி மகேஸ்வரி (37), இவர்களது உறவினரான சிவரஞ்சனி (48) என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் சரவணகுமார், மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி லால்குடி கிளைச் சிறையில் அடைத்தார்.
*
1
of 842
Comments are closed.