தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
இந்திய நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி எதுவும் ஒதுக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று(27-07-2024) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான
மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளருமான மு.அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, அவைத்தலைவர் எஸ்.ஏ.அம்பிகாபதி, சேர்மன் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், கோட்ட தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், கமால் முஸ்தபா, நாகராஜன் இளங்கோ, ராம்குமார், நிர்வாகிகள் சீனிவாசப்பெருமாள், இளைஞரணி ஸ்ரீரங்கம் ஆனந்த், தில்லைநகர் கண்ணன், வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி , மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா, தொ.மு.ச. குணசேகரன், பம்பரம் சுத்திஜெயக்குமார், கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி , புஷ்பராஜ், ராமதாஸ், சுபா, கலைச்செல்வி கருப்பையா, வட்டச் செயலாளர்கள் மார்சிங்பேட்டை செல்வராஜ், மூவேந்திரன், வட்ட பொருளாளர் பந்தல் ராமு, ஸ்டார் சர்ச்சில், கிங், உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.