Rock Fort Times
Online News

திருச்சியில் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட்ஸின் மண்டல அலுவலகம் திறப்பு விழா…

இந்தியா முழுவதும் 476 கிளைகளை கொண்ட ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் திருச்சி மண்டல அலுவலகம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்.ஆர்.எஸ். காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நிர்வாக மேம்பாட்டு பணிகளுக்காக அங்கிருந்து அன்னதான சமாஜம் எதிரில் உள்ள எல்.ஜி காம்ப்ளக்ஸிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது . இதன் திறப்பு விழா கடந்த மே 24-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது . ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் கோகுலம் கோபாலன் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். முதல் சீட்டுக்கான விண்ணப்ப படிவத்தை ராக்போா்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோகுலம் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் பைஜூ கோபாலன், துணைத் தலைவர் வி.சி.பிரவீன், ஒருங்கிணைப்பு இயக்குனர் கே.கே.நானு ஆகியோர் செய்திருந்தனர். நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என்.எம். வினோதன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பி.எல்.ஏ.குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் பழனியப்பன், அஸ்வின் ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன், ஸ்ரீரங்கம் சாந்தி இண்டஸ்ட்ரீஸ் கோகுல், பிரணவ் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் ஜான்சன்குமார், எல்.ஆர்.எஸ்.குழும தலைவர் மணி, யாஅல்லாஹ் ஷாமில் உரிமையாளர் இதயத்துல்லா, எவரெஸ்ட் பார்க் ரெசிடென்சி உரிமையாளர் பிரம்மநாதன், ஸ்ரீராம் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் ஸ்ரீராம், தனலட்சுமி அண்ட் கோ அருட்செல்வம், பார்த்தசாரதி ஸ்வீட்ஸ் ஜான்சிராணி, மூகாம்பிகை ஏஜென்சிஸ் முத்துக்குமார் மற்றும் எல்.ஜி.காம்ப்ளக்ஸ் உரிமையாளர் லோகநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.                                             

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்