திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவள்ளி. இவரது பெயரில் எலந்தப்பட்டி பகுதியில் வீட்டுமனை உள்ளது. அந்த இடத்தை சென்னை பல்லாவரம் இந்திரா நகர் பொழிச்சல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி பாப்பா (36) என்பவர், போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டு திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயன்றார். அப்போது பதிவு அலுவலக பணியாளர்கள் கணினியில் சோதித்துப் பார்த்ததில் அந்த நிலம் வேறு ஒருவரது பெயரில் இருப்பதும், போலி ஆவணங்கள் மூலம் மற்றவர் நிலத்தை விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலர் லாவண்யா அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, பாப்பாவை கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பத்திரப் பதிவுக்காக பாப்பாவுடன் வந்த அவரது கணவர் சதீஷ்குமார் (42) மற்றும் சென்னை ராயப்பேட்டை முஸ்தரா பேகம் தெருவை சேர்ந்த சமீர் என்கிற விஜயராஜ் (37), சென்னை பொழிச்சல் பிரேம்நகரை சேர்ந்த அ. முகமது அன்வர் (45 ) ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
Comments are closed.