திருச்சி , திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்த விஷ்ணு- காமாட்சி தம்பதியின் மகள் அனுஸ்ரீ (8). திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு மாதமாக காமாட்சி, கூத்தை பாரில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தை அனுஸ்ரீயுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், வீட்டில் அனுஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தாள். இதில் மூச்சு பேச்சில்லாமல் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சிறுமி இறப்புக்கான காரணம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.