தமிழகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த எஸ்.ரவிச்சந்திரன் எஸ்.பி.ஆக பதவி உயர்த்தப்பட்டு திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரத்தில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த எச்.ரமேஷ்பாபு
எஸ்.பி.ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மாநகர காவல்துறையின் உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வி.மலைச்சாமி எஸ்.பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறையின் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ஏ.சி.செல்லப்பாண்டியன் எஸ்.பி.யாக ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.