ஜம்மு காஷ்மீரில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் பழைய இரும்பு கடை உள்ளது. இந்தக் கடைக்கு வந்த சிலர் லாரியில் இருந்து பழைய பொருட்களை இறக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது கடையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் நசீர் அகமது (வயது 40), ஆசிம் அஷ்ரப் மிர் (20), ஆதில் ரஷித் பட் (23) மற்றும் முகமது அசார் ( 20) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷேர் காலனியில் வசித்து வந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தியது. இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Comments are closed.