Rock Fort Times
Online News

திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ‘ஐ.டி. ரெய்டு’ – கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது…!

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யும் தணிக்கை கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருடாந்திர வரவு செலவுகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இந்த தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அதிரடியாக நேற்று மாலை முதல் முதல் நள்ளிரவு வரை தணிக்கைக்குழு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான விவரங்களை சேகரித்தனர். இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது. அவர்களிடம் போலீஸார் தனியாக விசாரணை நடத்தி னர். அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் சோதனையால் அரசு ஊழியர்களிடையே பரபரப்பு நிலவியது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்