தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி( செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. 15-ம் தேதி( புதன்கிழமை) மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், 16ம் தேதி (வியாழக்கிழமை) உழவர் திருநாள் என்பதால் அரசு விடுமுறை நாட்களாகும். 17- ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கி உள்ளவர்கள், கல்வி பயில்வதற்காக வெளியூர்களில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் . ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் அரசு சிறப்பு பேருந்துகளில் ரிசர்வேஷன் முடிந்து விட்டதால் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியூர் செல்ல கட்டணத்தை சகட்டுமேனிக்கு உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதேபோல, விமான கட்டணமும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான ₹ 3,999 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் இருந்து மதுரை செல்ல ₹ 17,645 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாக ₹ 2,199 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது₹ 14,337-ம் சென்னையில் இருந்து கோவை செல்ல வழக்கமாக ₹ 3,485 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 16,647- ம், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணம் ₹4,199க்கு பதிலாக 12,866-ம் வசூலிக்கப்படுகிறது.மேலும், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வழக்கமாக ₹ 3,296 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ₹17,771-ம், சென்னையில் இருந்து சேலம் செல்ல வழக்கமாக வசூலிக்கப்படும் ₹ 2,799க்கு பதிலாக 9,579 -ம் வசூலிக்கப்படுகிறது. விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேறு வழியின்றி டிக்கெட் “புக்” செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.