திருச்சி மாநகராட்சியுடன் தாயனூர் கிராமத்தை இணைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்- தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு…!
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப்குமாரிடம் தாயனூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக கே.பழனிச்சாமி என்பவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாயனூர் கிராமம், 75 சதவீதம் விவசாயம் சார்ந்த கிராமமாகும். தாயனூர் ஊராட்சியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் எங்கள் பகுதி மக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பறித்து கடுமையான வரி விதிப்பு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிதிச் சுமையினை ஏற்படுத்திவிடும். மேலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரின் வேலை வாய்ப்பு பறிபோகும். ஆகவே, எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.