Rock Fort Times
Online News

வாகன சோதனையில் சிக்கிய ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள்…!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்தவகையில்  புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில்  தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில்  தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் அதிகளவு இருந்தன. அந்த வேனில் வந்தவர்களிடம் அந்த நகைகளை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும்  இல்லாததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  அங்கு, தங்க நகைகளை ஆர்டிஓ தெய்வநாயகி  மேற்பார்வையில் கணக்கிடப்பட்டது. அதில், 8 ஆயிரத்து 683 கிராம் எடையுள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 4  கோடியே 18 லட்ச ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பறிமுதல் செய்யப்பட்ட அந்த நகைகள் இலுப்பூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  அந்த நகைகள் எங்கு, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.  அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்