திருச்சி மாவட்டம், முசிறியில் இயங்கும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மணப்பாறையில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையில் போலீசார் மணப்பாறை ஆண்டவர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் நின்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவர் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் 8 கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருச்சி ராம்ஜிநகர், ஹரி பாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (31) மற்றும் அவரது மனைவி தீபிகா (24) என தெரிய வந்தது. தீபிகாவின் தந்தை ராஜா மற்றும் தாயார் சுசீலா ஆகியோர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மகன் ராஜா மற்றும் மகள் தீபிகா, மருமகன் ராஜாராம் ஆகியோரிடம் கொடுப்பதும் அவர்கள் சில்லறையில் வியாபாரம் செய்வதும் தெரிய வந்தது. அதன்பேரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன், மனைவியான ராஜாராம் மற்றும் தீபிகாவை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.