Rock Fort Times
Online News

100 அடியை எட்டியது மேட்டூர் அணை : பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை…!

கர்நாடக மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த  விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் வெளியிட்ட அறிக்கையில், காவிரியில் அதிகஅளவில் தண்ணீர் வருவதால் விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும்.இதைக் கருத்தில் கொண்டும், அணை முழுவதுமாக நிரம்பிய பின்னர் ஒட்டுமொத்த நீரையும் கொள்ளிடத்தில் திறந்துவிட்டு,வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும் முன்கூட்டியே அணையிலிருந்து விநாடிக்கு 25ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும். இதனால் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடிநீர்மட்டம் உயரும். எனவே, மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்க கூடாது. உபரி நீரை கடலில் கலக்கவிடாமல், திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். அணையில் இருந்து காவிரியிலும், கிளை வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல, விவசாய சங்க நிர்வாகிகள் பலர் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்