அதிமுக இரு பிரிவுகளாக செயல்படுவதால் மன வேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு மகேந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகேந்திரன் குழந்தையின் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான கல்விச் செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும். அவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 30 லட்சம் இழப்பீடும், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுபோன்று அதிமுக தொண்டர்கள் யாரும் தவறான முடிவை எடுக்கக் கூடாது என பாதம் கணிந்து கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.