Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து சற்று குளிரச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழை பரவலாக மாநிலம் முழுவதும் பெய்து குளிரவித்தது. அதன் தொடர்ச்சியாக கடல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும். இடங்களில் க முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி களமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலைஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக களமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தரமபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்ட்ங்கள். காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமவழயும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பிடி மின்னலுடன் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், கோயை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி. நெல்லை. கள்ளியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர, ஈரோடு, தர்மபுரி. கிருஷ்ணகிரி சேலம் நாயக்கல் கரூர். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை. மதுரை, விருதநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்