Rock Fort Times
Online News

அரசு டவுன் பஸ் இருக்கை கழன்று விழுந்த சம்பவம்: பணிமனை மேலாளர் உள்பட 3 பேர் “சஸ்பெண்ட்”…!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.  அந்த பஸ்ஸில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே சேதமடைந்த இருக்கையில் எடமலைபட்டிபுதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன்(54) அமர்ந்திருந்தார். அந்த பஸ் கலையரங்கம் திருமண மண்டபம் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது, சேதமடைந்த இருக்கை கழன்று வெளியே போய் விழுந்தது. இதில் இருக்கையுடன் சேர்ந்து நடத்துநர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. உடனே, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டு அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று  பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இந்த சம்பவம் தொடர்பாக  அரசுப் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்