Rock Fort Times
Online News

பொதுமக்களிடம் வசூலித்த சீட்டு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தற்கொலை…!

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, கவரப்பட்டி மேற்குதெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (30). இவர் சென்னையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வினோதினி (20). ராஜா, கவரப்பட்டி பகுதி பொதுமக்களிடம் சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார்
ரூ.1கோடி அளவில் பணம் வசூல் செய்ததாகவும். ஆனால், அவர் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால், வாடிக்கையாளர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அவர் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து, சீட்டு கட்டிய சிலர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்த ராஜா, கடந்த 23ந் தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிந்து ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்