Rock Fort Times
Online News

திருச்சியில் அரசு டவுன் பஸ் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்டதால் கண்டக்டர் படுகாயம்…!

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கலையரங்கம் திருமண மண்டபம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் இருக்கை ஒன்று கழன்று வெளியே வந்து விழுந்தது. இதில் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த கண்டக்டரை பயணிகள் மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.
ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்