தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது
விற்பனை நடைபெறுகின்றன. இந்த கடைகளில் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் போன்ற இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு வகை மதுபானங்கள், பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை வெளிநாட்டு மது பானங்கள் மற்றும் பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் வாரிய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ், அரசு உயரதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் இதுகுறித்து விவா தித்துள்ளனர். மேலும், பார் உரிமம் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய டெண்டர் அறிவிப்பு மற்றும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024
பிப்ரவரி 1-ம் தேதி மது விலைகள் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.