Rock Fort Times
Online News

தேர்தலில் தோல்வி ஏன்? திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததுடன், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்று(08-07-2026) திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் தோல்வி அடைந்தது ஏன்?, என்ன காரணம்? , அதிமுக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா?, இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?, கட்சியை வளர்க்க இனி என்ன செய்யலாம், வருகிற உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்து விட்டு ஓடுபவர்களைபற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இது. யாராலும் அழிக்க முடியாது. நமது கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போனதாக தான் வரலாறு. சட்டசபை தோல்வியில் இருந்து கட்சியினர் மீண்டும் வர வேண்டும். இனி வர போகும் தேர்தல் நமக்கானது என்று பேசினார். திருச்சி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து விட்டு நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்