Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்திலிருந்து திருவெறும்பூருக்கு அரசு பேருந்து சேவை: துரை வைகோ எம்.பி. துவக்கி வைத்தார்..!

ஸ்ரீரங்கத்தில் இருந்து பால்பண்ணை வழியாக திருவெறும்பூருக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் இடையே நேரடி பேருந்து சேவை இன்று (19-09-2026) முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையை கொடி அசைத்துத் துவக்கி வைத்ததுடன் அதே பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்