Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றிக்கு களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன்மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று(செப்டம்பர் 19) வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நாளை முதல் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இடைத்தேர்தலில் த.வெ.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன், எம்பிக்கள் ரவிக்குமார், துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், வன்னிஅரசு உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்