தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரின் உறவினர் ஒருவர் சமயபுரம் அருகே இருங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்த்துவிட்டு சொந்த ஊர் செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அந்த வாலிபரிடம் நான் உன்னை பஸ் நிலையத்தில் கொண்டு போய் விடுகிறேன் என்று கூறி ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால், அவர்பஸ் நிலையம் செல்லாமல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ, அய்யனார் மற்றும் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த வசந்த் ஆகியோர் அந்த வாலிபரை இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்துள்ளனர்.அவர் மறுக்கவே அவரை ஆயுதங்களால் தாக்கி மிரட்டி இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,100 பணத்தை பறித்துக் கொண்டனர்.இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.பின்னர், அந்த வாலிபர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீக்கடைகாரரிடம் செல்போனை வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
அதன்பேரில், சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த வசந்த் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
*
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.