Rock Fort Times
Online News

கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது பதியப்பட்ட 92 ஆயிரம் வழக்குகளும் ரத்து..!

கடந்த காலங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்படி போராடிய ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (நவம்பர் 16) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு
முதலமைச்சர் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92.000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்