Rock Fort Times
Online News

+2 முடித்தவர்களுக்கு இலவச தொழில்நுட்ப பயிற்சி! விண்ணப்பித்து பயனடைய திருச்சி கலெக்டர் அழைப்பு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் தொழில்நுட்பப் பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயில 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, மற்றும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணைதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, திருச்சி- 620 001 என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 0431-2463959 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் எம். பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்