பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறை மட்டுமின்றி ஜனவரி 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்று (ஜனவரி 10) துவங்கி ஜனவரி 13-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 8 ஆயிரத்து 368 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Comments are closed.